Wednesday 26 September 2018

தக்காளிக்காய் கூட்டு


ஏழைகளின் எளிமையான
குழம்பு இது..
கிராமப் புறங்களில் இன்றும் பேசப்படும்
தக்காளிக் கூட்டைப் பற்றி
பார்க்கலாம் வாங்க...

தேவையானவை :

தக்காளிக்காய் : நான்கு
மிளகாய் : நான்கு
நாட்டு வெங்காயம் :    ( தேவைக்கேற்ப )
நல்லெண்ணெய் :
  ( தேவைக்கேற்ப )
கடுகு உளுந்தம்பருப்பு
கருவேப்பிலை
  ( தேவைக்கேற்ப )
மசால்பொடி ( தேவைக்கேற்ப)
கொத்தமல்லி.

செய்முறை :
1. பாத்திரத்தை நன்றாகச்
     சூடேற்றி. நல்லெண்ணெயை அதில் ஊற்ற வேண்டும்.

2. எண்ணெய் கொதிக்கும்
போதே நறுக்கிய வெங்காயம், மிளகாயை
உள்ளே போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்ததாக நறுக்கிய தக்காளியையும் உள்ளே போட்டு வதக்க வேண்டும்.

3. நன்கு வதங்கியதும்.
மசால்பொடியைத் தூவி
கொஞ்சம் தண்ணீர் ஊற்ற வேண்டும்.

4.நன்றாகக் கொதித்த பின்.
தேவைக்கேற்ப உப்பினைப் போட வேண்டும்.
இப்பொழுது சுவையான தக்காளிக் கூட்டு தயாராகும்.

5.இன்னொரு பாத்திரத்தில்
எண்ணெய்யை ஊற்றி கொதித்ததும் கடுகு உளுந்தம்பருப்பைப் போட்டு
நன்றாக வறுத்து..
இறுதியாக கருவேப்பிலையைத் தூவி
தக்காளிக் கூட்டில்
அப்படியே கொட்டிவிட வேண்டும்..
அருமையான மணத்துடன்
தக்காளிக் கூட்டு தயார்.

6. தக்காளிக் கூட்டின் மேல்
கொத்தமல்லி இலைகளைத்
தூவி விட மணம் இன்னும்
அதிகரிக்கும்.

குறிப்பு : மின்சாரம் இல்லாத
நேரங்களில் பெரும்பாலான
வீடுகளில் தோசை , இட்லிக்கு இவையே சட்னிக்கு உடனடி மாற்றாகும்.
           வீட்டில் அம்மா,மனைவி இல்லாத நேரங்களில் பெரும்பாலும் ஆண்களின் விருப்பம் இந்தத் தக்காளிக் கூட்டு செய்வதே ஆகும்.

ம.கண்ணன்.
மதுரை.

No comments:

Post a Comment