Wednesday 26 September 2018

ஆத்து (கொய் மீன்) குழம்பு

தேவையானவை :
கழுவிய ஆத்து(கொய்) மீன் : 1 கிலோ
உறித்த சின்ன வெங்காயம் : 250 கிராம்
தக்காளி :2 நறுக்கியது
தேங்காய் : 4 கீற்று(துண்டு)
பச்சைமிளகாய் : 4
மிளகாய் தூள் , கொத்தமல்லி தூள் மற்றும் மஞ்சள் தூள் போன்றவைகள் தேவையான அளவு

புளி : தேவைக்கேற்ப
கடுகு , வெந்தயம் , கருவேப்பிலை தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் நறுக்கியது : 4

மாங்காய் : 1(நறுக்கியது)

செய்முறை :
* மண் சட்டி அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் விட்டு உறித்த சின்ன வெங்காயத்தை வதக்க வேண்டும் பின்
வெட்டிய தக்காளியை போட்டு வதக்கி இரண்டையும் அரைத்துக் கொள்ளவேண்டும் .

* தேங்காயை தனியாக அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும் .

* மண் சட்டியை அடுப்பில் இட்டு தேவையான எண்ணெய் ஊற்றி கடுகு , வெந்தயம் கருவேப்பிலை போட்டு  கடுகு பொறிந்தபின் பச்சைமிளகாய் போட்டு அரைத்து வைக்கப்பட்ட வெங்காயம் தக்காளி கலவையை சேர்த்து
தேவையான அளவு மிளகாய்தூள் , கொத்தமல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து பின்பு அரைத்து வைக்கப்பட்ட தேங்காயை சேர்த்து அத்துடன் கழுவி வைக்கப்பட்ட ஆத்து(கொய்) மீனையும் சேர்த்து மூடி வைக்க வேண்டும் ஐந்து நிமிடம் கழித்து கரைத்து வைத்த புளி மற்றும் நறுக்கி வைத்த மாங்காயும் சேர்த்து மூடி வைத்து நன்கு கொதித்தவுடன் இறக்கவும் ருசியான ஆத்து(கொய்) மீன் குழம்பு தயார் ...🐟🐟

ர.ரகுராமன்

No comments:

Post a Comment