Tuesday 4 September 2018

என்னுள் நீதான்

உன்னை சுமந்த இதயத்துக்கு
துடிப்பு நிறுத்தும்
முகவரி அளிக்கப்பட்டது./

வேறு  ஒன்றும் சுமக்க
இயல வில்லை வலிமை
அடைந்து விட்டது./

உன்  பாசத்தாலும் நேசத்தாலும்
இரத்தச் சுரப்பி  அதிகமாகவே
இதயத்தை தாலாட்டிக் காற்றது./

இன்று உன் பிரிவினால்
இரத்த நாடிக்கு இரத்தச்
சோகை நோயானது./

இனி இறுதி நாள் வரை
சோகமே ஆதரவாக உள்ளது./

மருத்தவம் பார்க்க
சென்றால் நோயின் பட்டியல்
மருத்துவர்களை பெரும்
அதிச்சிக்கு ஆளாக்கியது./

இறுதியில் உடல் என்னும்
நாடு  கடனாளியாக மாறி
ஆட்சி புரிய முடியமல்
செயல் இழந்தது./

அன்புக் கரம் நீட்ட அயல்
நாடாகிய உன்னையே
நம்பி உள்ளது./

வாஸ்து சாஷ்து பார்க்க
வேண்டாம்உறுதி வாக்கு
ஒன்று ஒப்பமிடு  பத்திரத்திலே
அதுவே பெரும் உதவியானது./

என்னுள் நீ நிலையாகுவாய்
என்று நான் உறுதி காணவேண்டும்
ஏன் எனில் என்னுள் நீ தான் /

No comments:

Post a Comment