Thursday 20 September 2018

சௌ சௌ மசியல்


தேவையான பொருட்கள்

1 சௌ சௌ  தோல் நீக்கி   நறுக்கியது-1
2  தக்காளி -6 பொடியாக
நறுக்கியது
3  பச்சைமிளகாய் -5
4  இரண்டு முழுப்பூண்டுபற்கள்
பொடியாக நறுக்கியது
5  பெரிய சின்ன வெங்காயம்
கலந்து நறுக்கியது அரை கப்
6  சீரகம்
7 கறுவேப்பிலை
கொத்தமல்லித் தழை
7 சாம்பார் மிளகாய்த்தூள்
8  ஒன்று அல்லது அரை
டீஸ்பூன்
9 தேவையான அளவு
எண்ணை கடுகு
கல்லுப்பு

செய்முறை
*************
சௌசௌவை குக்கரில்
போட்டு சிறிது
நீரூற்றி மஞ்சள்
பொடி சேர்த்து
மூன்று விசில் விட்டு
வேக வைத்து
எடுத்துக் கொள்ளவும்

வாணலில் எண்ணை ஊற்றி கடுகு சீரகம்
போட்டுத் தாளித்து
கறுவேப்பிலை தாளித்து
பூண்டுப் பற்கள் போட்டு சிறிது வதக்கி
அதன் பிறகு வெங்காயம் நறுக்கின பச்சைமிளகாயும்
போட்டு
வதக்கின பிறகு
தக்காளியையும் போட்டு வதக்கி

நீர்வடித்து சௌ சௌ துண்டுகளைச் சேர்த்து
வதக்கி
சௌ சௌ வடித்த நீருடன் நீர் சேர்த்து
சாம்பார் மிளகுத்தூள்
உப்பு சேர்த்து
சௌசௌவை  நன்றாக வேக விடவும்
கொமல்லித்தழைகளைத்
துண்டு துண்டாக
நறுக்கிப் போட்டு
மசிக்கவும்

இட்லி தோசை ஊத்தாப்பம்
தொட்டு சாப்பிட
மிக சுவையாக இருக்கும்
சாதத்திலும் கூட
நல்லெண்ணையுடன்
சேர்த்து சாப்பிடலாம்
சுவையாக இருக்கும்

   ரேணு பாலு

No comments:

Post a Comment