Sunday 2 December 2018

சின்னச் சின்ன ஆசைகள்

சின்னச் சின்ன ஆசைகள் /
ஆசைகள் சிதறிப் போனது /
நாட்டு நிலமையினாலே/
காலம் கடந்து மனதில் /
மீண்டும் எழுகிறது/
பருவம் கடந்தமையால் /
பெரும் மூச்சுடன் முடிகிறது /
என் ஆசை என்னவென்று /
கொஞ்சம்  நான் சொல்லி விடலாமா...?

மணல் புட்டுச் சுட்டு
தட்டி உடைக்க ஆசை./
வட்டக்காவடி விளையாடி
பக்கத்தில் வருவோரை பிடித்து
வீழ்த்தி வெற்றி காண ஆசை .../

சதுரங்கம்  போட்டு /
துள்ளி விளையாடி /
காலில் அடி பட்டு /
பாடசாலைக்கு விடுமுறை
எடுக்க ஆசை./

வீட்டுப் பொருட்களைத் திருடி/
சக தோழிகளோடு கூட்டாஞ் சோறு /
சமைத்து உண்ண  ஆசை .../

தெப்பக் குளம் இறங்கி /
அல்லி மலர் பறிக்க ஆசை/
பாவாடை தாவணியோடு/
உயர்ந்த மரத்தில் ஊஞ்சல் கட்டி /
பாட்டுப் பாடி ஆட ஆசை ..../

சீருடையோடு பாதையோரம்  /
தேங்கி நிற்கும் நீரில் முகம்
பார்க்க ஆசை./
ஆலயம்  முன்பு மேடையிலே/
ஊரே  வியர்க்கும் படி /
சங்கீதம்  இசைக்க ஆசை /
எத்தனையோ ஆசை /
அத்தனையும் போனது நிராசையாய் / செல்வெடி ஓசையினாலே...../

  

No comments:

Post a Comment