Sunday 2 December 2018

அழகு

மனம் பார்த்த காதல் /
மதம் பார்ப்பதில்லை./
குணம் பார்க்கும் காதல் /
குலம் பார்ப்பதில்லை /

அகம் நுழைந்த காதல் /
அழகு தேடுவதில்லை /
பாசம் கொண்ட காதல் /
பணத்தின் கனம் பார்ப்பதில்லை ./

நிஜ அன்பு நிறைந்த காதல் /
நிலையில்லாத வடிவு பார்ப்தில்லை /
அளவு கடந்த காதல் /
புறத்தழகு பார்ப்பதில்லை../

முழுமையான காதல் /
முழு நிலவான மதி தேடுவதில்லை/
இரு உள்ளம் இணைந்த காதல் /
உடல் குறையை ஏற்பதில்லை ./

உயிரோடு கலந்து வாழத் துடிக்கும் காதல் /
உரசிப் பார்த்து தேர்ந்து எடுப்பதில்லை /
உண்மை உணர்வும் உணர்ச்சியும் /
உதயமான காதல் உதறிப் பார்ப்பதில்லை./

இரு இதயம் இடம் மாறி  /இரு கரம் சேர்ந்து /
இன்ப துன்பம் பங்கிட்டு  /
இறுதி வரை வாழ்ந்து முடிக்கும்  காதல்/ எப்போதும் அழகுக்கு /
முன் உரிமை கொடுப்பதில்லை./

    

No comments:

Post a Comment