Monday 26 October 2020

விடை கொடு அன்பே

தூங்கிடும் விழிகளுக்குள் .
தூங்காமல் கனவு 
தூண்டில் போட்டால்.
ஏங்கிடும் நெஞ்சம் 
என்ன செய்திடும்.

விளைந்திடும் 
கற்பனையெல்லாம்.
காதலாய்ப் பூத்தால்.
அனர்த்தம் கொண்ட மனம் 
எப்படி வாங்கிடும்.

சுத்திகரித்த குருதியும்.
உன்னைக் கொண்டு 
மூளையிலே நிறுத்தினால்.
மத்தியிலே இருக்கின்ற 
சிந்தனை எங்கு சாந்திடும்.

இரவும் பகலும் 
செவிகள் இரண்டும்.
இளையராஜா 
இசையிலே மயங்கினால்.
ஆசைகள் பெருகாமல்
எப்படி அடங்கிடும்.

வாடைக் காற்றும் 
கோடை மழையும்
ஆடை களைத்து 
இடையைக் கிள்ளினால்.
பாவம் அந்த மடமைப் பெண்
மண மேடை தேடிடும் 
எண்ணத்தை  எப்படி 
உள்ளத்தால் அடைத்து வைப்பாள்.

No comments:

Post a Comment