Thursday 7 March 2019

உதவா உறவு

உதவாத உறவென்று யாரைச் சொல்வேன்./
உதவுவோர் யார் என்று எண்ணிப்பார்த்தேன்/.
உதவாதோர் இருப்பதாய்
உணர்ந்து கொண்டேன் /
உதவாதோர் யார்
என்று சொல்ல வந்தேன்./

உறவு உண்டு உரிமை
உண்டு உண்மையோடு./
உறவு என்னு
உதவுவோர் யார் உண்டு./
உரிமையென வந்து உபத்திரம் கொடுப்போர் உண்டு./
உரி நேரத்தில் சென்று
அன்புக் கரம் நீட்ட எவர் உண்டு./

கோடி பணம் இருந்தால்
ஓடி வருவோர் உண்டு./
நாடித் துடிப்பு நின்ற பின்னும்
கூடி அழுவோர் உண்டு./
தேடிவந்த சொந்தங்களிலே
சொத்தைக் கணக்கிடுவோர்
தான் உண்டு./
வாயாடி போராடி பங்கு கேட்டே குதிப்போரே அதிகம் உண்டு. /

ஏழையானால் எளக்காரப்
பார்வையயை வீசுவோர் உண்டு./
ஏழை உறவு என்றால் பார்த்தும்
பாராது நடப்போர் உண்டு./
ஏற்ற தாழ்வை கண் எதிரே
காட்டி வலி கொடுப்போர் உண்டு./
ஏராளம் தாராளம் இவர்கள்
போல் நாட்டில் பலர் உண்டு./

பணத்துக்கு முன்
பாசம் கசப்பது உண்டு./
பணத்தைக் கண்டால்
வேசம் போடுவோர் உண்டு./
பத்துக்குப் பத்து கபட நாடகம்
போடுவோர் தான் அதிகம்  உண்டு./
பத்தி எரிகிறது மனம்
இவர்களின் போலி பாசம் கண்டு./

இந்த உறவுகளை அடையாளம் காண்பதில் சிரமம் உண்டு. /
இவைகளை உதறி விட்டு
வாழ வழி ஏது உண்டு./
இவர்கள் நடவடிக்கைகளை
கண்டு ஏங்குவோரும் உண்டு./
இவைதான் உறவுகளின் செயல்பாடு என்று தாங்குவோரும் உண்டு./

இது பற்றி விரிவாக சொல்ல விரும்பாதோர்
பெயர் பட்டியலில் நானும் உண்டு./
அடையாளப்படுத்தவோ நான் அவர்களைக் கொட்டு /
வேண்டாம் என்று விட்டு
விட்டேன் மன உறுதி பூண்டு./

No comments:

Post a Comment