Tuesday, 12 March 2019

என்னுள் நுழைந்த காதல் செந்தேனே

கனவோடு வந்து கலந்தவளே.
காதல் நரம்பின் வழியே நுழைந்தவளே.
கலைந்து விடாத கலைமுகத்தழகானவளே.
கரைந்து வருகிறது எனது
மோகமடி என்னவளே ...../

இரவெல்லாம் உறக்கத்திலே இதழ் கடிக்கிறாய்.
இதமான இன்பத்துக்கு என்னை அழைக்கிறாய்.
இச்சையெல்லாம்  காதோரம் சொல்லி முடிக்கிறாய்.
இமை திறந்து பார்த்தால் இருட்டறைக் காட்சியே கொடுக்கிறாய் ..../

வெட்கம் துறக்க பக்கம் நெருங்கி வாயேன்டி.
பட்டுக் கன்னத்தில் முத்தம் பதிக்க பத்தினியே என் அருகே வாயேன்டி.
பருவ காலப் பனியும் படர்ந்திருக்குதடி.
பட்டு மெத்தை தான் விரித்து பர பரப்புடன் நான் காத்திருக்கின்றேனடி ....../

இடை தொட தடை போடுவாயோ
சடை போட்ட கூந்தலிலே என் விரல்
நடை போட விடுவாயோ.
படையில்லா காதல் மன்னன்  நானடி
சிற்பச்சிலையே உன்னை நான் விடுவேனோ.
இரு விழி வழியே இதயம்  நுழைந்த கிளியே
காத்திருக்கின்றேன் நான் ஏரிக்
கரையில் தனியே ...../

No comments:

Post a Comment