Tuesday 29 January 2019

தழுவும் கரங்கள்

கன்னித்தாய் காலமானாள்.
கன்னித்தமிழிலே காவியமானாள்.
தமிழரின் கண்ணீரிலே ஓவியமானாள்.
தமிழகத்தின் அன்னை அவள்... !

வங்கக்கடலின் தாலாட்டிலே உறங்குகிறாள்.
தங்கத்தமிழிலே முழக்கமிட்ட மங்கை அவள்.
எழுந்திடாமலே உறக்கத்தில் கலந்து விட்டாள்.
மக்களை ஆறாத் துயரத்தில் தள்ளி விட்டாள்..!

இரண்டு விரல்களையும் மடக்கி விட்டாள்.
இருண்ட குழிக்குள் இறங்கி விட்டாள்.
மக்களுக்காக நான் எனக்காக மக்கள்  என்றவள்.
மக்கள் கதறும் ஓசைக்குச் செவி சாய்க்காது படுத்து விட்டாள்...!

கற்பம் தாங்காமலே அன்னையானாள்.
நாட்டைக் கட்டிக்காக்கும் தலைவியானாள்.
இல்லற வாழ்விலே துறவியானாள்.
வெண்ணிற ஆடைக்கு விதிவிலக்கானாள் ...!

மண்ணறை இறங்கி கல்லறை கொண்டாள்.
அதற்கு முன் எண்ணற்ற சாதனை பூண்டாள்.
அஞ்சா நெஞ்சம் கொண்டவள்.
அடக்க ஓங்கும் கரங்களையும் வென்றாவள் /

சாதித்தவை  போதும் என்று சரிந்து விட்டாள் .
சாகவரம் பெற்ற புகழ்பெற்று மறைந்துவிட்டாள்.
வாய் விட்டு அழுதும் மார்பு தட்டி அழுதும் அவள்
மீண்டும் ஆட்சிப்பீடம் ஏற மறுத்து விட்டாள் .

காட்சிப்பிளம்பாக நிலைத்து விட்டாள்
புரட்சித் தலைவி   அவள்
ஓய்வு தேவையென்று ஓய்ந்து விட்டது
ஏழை மழலைகளைத் தழுவும்  கரங்கள் .

           

No comments:

Post a Comment