Sunday 6 January 2019

மகிழம் பூக்காரி

கன்னக்குழி விழுந்த சின்னப்
பொண்ணு  கண்ணழகி /
சொல்லப் போதாது வார்த்தை
அவ்வளவு பேரழகி /

கிள்ளிவிடவே எண்ணம்
தோனும் இடையழகி /
தள்ளிப் போகச் சொல்லியே விரட்டும் 
அம்பு போன்ற  பார்வை  விழியழகி /

நளினங்கள் புரியும் விரலழகி/
நகை அணியாச் சங்குக் கழுத்தழகி/
தேன் தமிழ் விளையாடும் கவியழகி/
காண்போரை மயங்க
வைக்கும்  கொள்ளையழகி /

திரை போட்ட மார்பழகி /
திரண்டு வரும் வெண்(ணெய்) முகத்தழகி /
நிறைந்திருக்கும்  மாதுளைப் பல்லழகி/
நிறைந்து நீண்ட கருமேகக் கூந்தலழகி/

தண்டை போட்ட கென்டைக்கால்லழகி /
கொண்டையிட்டு பூ முடித்த கறுத்தழகி/
பேச்சாலே பட்டை தீட்டும் சினத்தழகி/
என் மண்டையிலே கிறுக்கேற்றிய மகிழம் பூக்காரி /

   

No comments:

Post a Comment