Sunday 13 January 2019

காலைப்பொழுது

அடி வானம் சிவக்க /
அந்த நொடியே பறவைகள்
இறகை விரிக்க /
கல கலப்போசையோடு
என் இல்லம் கடக்க /

விரித்த நாள் ஏட்டை
மடித்த படியே
நான் பார்த்து வியர்க்க /
சொற்ப வேளைக்குள்
சொக்கித்தான்
போனது என் ஆத்மா /

காலைப் பனியோடு
கலந்த காற்று மெதுவாக வீசி/
ஆடையில்லாத இடம் பார்த்து நுழைந்து /
என் மேனியைத் தடவி நழுவ /
உடையாலே தடை போடாமல் /
நானும் அதற்குள்ளே மூழ்கித்தான் போவேன் /

சுற்றுச் சூழலலில் இருக்கும்
மனைகளில் இருந்து /
புறப்படும் ஒலிகள்  /
காதுக்கு இனிமையையு
மனசுக்கு எரிச்சலையும்  /
கலந்தே  கொடுக்கும் /

அதட்டலோடு
அன்னையின் குரல் /
தூக்கம் கலையாத
மழலையின்  அழு குரல் /
வேடிக்கையும்
வேதனையுமாக இருக்கும் /
நம் வாழ்வை மனம்
பின்நோக்கி இழுக்கும் /

காலைப்பொழுதைப் பற்றி
களைப்பு இன்றிக் கூறலாம் /
காலைக் கடமை எனக்கும் உண்டு/
காலைப் பணி நிறைந்தே உண்டு/

நெற்றியிலே முட்டி விடுகிறது
நினைவு கொண்டு /
மண்டு நேரமாச்சு என்று திட்டுகிறது  எண்ணம் நின்று கொண்டு /
நானும் எழுந்து விட்டேன் கடமைகளை முடிக்கத் தொடங்கி விட்டேன் /

No comments:

Post a Comment