Saturday 12 January 2019

கோபம் கொண்டு

சாமத்திலும் சாரை போல் 
நீ ஊர்ந்திட. வேண்டாமா ..?
கூந்தலிலே விடியும் வரை சாமந்திப் 
பூ வாசம் வீசிட வேண்டாமா...?

முத்த மழை மொத்தமாய் 
பொழிந்திட வேண்டாமா ...?
புன்னகை சிந்தும் இதழ் 
சிவந்திட வேண்டாமா ......?

போர்வையும் வியர்வை 
குளித்திட வேண்டாமா ...?
பருவ இன்பம் தான் கண்டு பகல்
நிலவும் வெட்கம் கொண்டிட வேண்டாமா..?

நுழைந்து விடும் குளிர் காற்றும்
மூச்சுக் காற்றின் சூடு  பொறுக்காமல்
திரும்பிட வேண்டாமா    ?
இடை தொட்டுள்ள உடையெல்லாம்
விடை பெற்றிட வேண்டாமா ...?

விடிந்த பின் பார்க்கையிலே நெற்றிக் குங்குமம் உமது கன்னத்திலே 
கோலம் கிறுக்கியிருக்க  வேண்டாமா ..?
கொண்டவள் மேல் கோபம் கொண்டு
நேரம்  காலம் பாராமல் நீ பிரிந்து
சென்றால் இத்தனையும் நிகழ்ந்திடுமா ..?

No comments:

Post a Comment