Tuesday 22 January 2019

வேம்பு சோலையிலே /
நடு ராத்திரி வேளையிலே /
அடுக்கு மல்லிப் பூ எடுத்து /
துடுப்பு இடுப்புக் காரி நீ அமர /
மஞ்சம் ஒன்று போடுவேன் /

தொட்டு இழுத்து கட்டி அணைத்து /
வட்ட நிலவோடு ஒப்பிட்டு /
செந்தமிழ் சொல் தொடுத்து /
கவி ஒன்று பாடுவேன் /

அண்டமெல்லாம் எட்டிப் பார்த்து /
அடுத்த நொடியே மேலே நோக்கி /
விண்ணிலே கொட்டிக் கிடக்கும் /
நட்சத்திரத்தைக் கொண்டு வந்து /
உன் கொண்டையிலே சூடுவேன் /

உனது அங்கமதை கொட்டும் /
பனி தொட்டு விடாமல் /
ஓடும் முகிலை விரட்டி விட்டு /
நீல வானில் ஓர் துண்டை வெட்டி
வந்து அங்கமெல்லாம் மூடுவேன் /

நுரையோடு கரை
தொடும் அலை போலே/
தினம் தினம் உனைத்
தழுவிடவே நெருங்கிடுவேன் /

இமை மூடி மூடித்
திறக்கும் விழிக்குள்ளே /
குட்டிக் குட்டிக் கனவை
கொண்டு வந்து நிறுத்திடுவேன் /

ஆசை வார்த்தை பேசிப் பேசி 
மோகத் தீயை மூட்டிடுவேன் /
அன்பு வார்த்தை வீசி வீசி /
அளவு  இன்றி இல்லையில்லா
ஆனத்தம் கொடுத்திடுவேன்/

பதினாறு வயது பருவ கேங்கையே/
(மங்கையே) உன்னை பருக வரும் /
அரும்பு மீசைக் காரன் நானடி/
என் காதல்  காவியமதைக் கேளடி/

 

No comments:

Post a Comment