Friday, 14 August 2020

தேர்தல்

ஓட்டுப் போட்டோர் எல்லோரும் கொக்கரிக்கவில்லை.
கொக்கரிப்போர் எல்லோரும்
ஓட்டுப்போட்டோரில்லை.

ரோட்டுக்கு வந்து 
கோசமிட்டோர் எல்லோரும் 
பணம் பெற்றவர்கள் இல்லை.
பணம் பெற்றுக் கொண்டோர் 
எல்லோரும் விசுவாசிகளும் இல்லை.

அரசியும் ஆட்சியும் ஐந்தாண்டு 
வளர்ந்து மலர்ந்து மடியும் கிளை.
அதைச் சொல்லிக் கொண்டு 
கொசுக்களே இடையில் நீங்கள்
கொடுக்காதீர்கள் 
மக்களுக்குப் பெரும் தொல்லை.

பொதுநலத்திற்காக மட்டும் தேர்தல்
 களம் குதிப்போர் எவரும் இல்லை.
இதில் சுயநலமும் தேனைப் 
போன்று கலந்து மணக்கும் மாலை.

இவகளைச்  சிந்திக்காமல் 
இங்கே எத்தனையோ பேர்கள்
 புலம்பலோடு பதிவுகளை
முகநூல் தலையில் 
கொட்டுவதை நிறுத்தவில்லை.

பதிவுகளில் சாதி மத 
வேற்றுமை வாடை வீசுகிறது 
ஆனாலும் உதட்டோரம் 
உறவு என்னும் சொல்  பிறக்கிறது 
இது ஒரு நாடக மேடை என்பதை 
நாம் உணர்ந்தால்  நன்மை.😏

  

No comments:

Post a Comment