Wednesday 31 October 2018

ஒரு தந்தையின் தியாகமும் வலியும்


என் துணை இறந்த பின்னே/
இன்னும் ஓர்  துணையை /
நான் நாடாமலே  உன்னை
வளர்த்தேன் என் மகளே./

தொட்டில் கட்டி தாலாட்டுப் பாட /
தெரியவில்லை  கட்டில் போட்டு/
சீராட்டி வளர்த்தேனடா என் மகனே /

கால்  வலிக்க மரம் 
ஏறிக் கள் எடுப்பேன் /
இரும்பு அடிப்பேன் /
பாதையில்  கல் உடைப்பேன் 
முதுகு வலிக்க மூட்டை சுமப்பேன் /
வீட்டுக்கு வந்ததும் உன்யைும்
சுமப்பேனடா மகனே /

தட்டிக் கொடுத்து
விட்டுக் கொடுத்து/
செல்லம் பொழிந்து /
பாராட்டி வளர்த்தேனடா மகனே /

நான் உண்ணாமல் இருந்து /
உன்னை உண்ண விட்டு
மகிழ்ச்சி கண்டேனடா மகனே /
படாத பாடு பட்டு பட்டப் படிப்பு
வரை பறக்க விட்டேனடா மகனே/

உன் அன்னை இருக்கும் வரை
நான் என் பணிவிடை செய்தவையில்லையடா மகனே /
ஆனால் இன்று உனக்காக அனைத்தும் கற்றுக்கொண்டேனடா மகனே/

சுவையாக  சமைத்து
பசியாற்ற அறியாதவன் தான் /
உன் பசிதீர்க்க சமைத்துப்
போட்டேனடா மகனே /
தந்தையான நானே
தாயுமாகவும் மாறினேன்/
இல்லறம் வரை கொண்டு வந்து/
இன்பமான வாழ்வை அமைத்துத்
தந்தேனடா மகனே /

அன்பு இல்லம்
ஒன்று இருப்பதையே/
நீ அறிந்ததேயில்லையடா மகனே /
என் அன்பு மழையில் நனைந்து /
மலர்ந்த மலர் தானேடா நீ மகனே /

இன்று என்னை விட்டுச் செல்ல/
வந்து விட்டாயேடா  முதியோர்
இல்லம்/ தேடியே என் மகனே /
எங்கங்கோ அழைந்து அறிந்து /
கண்டு பிடித்து விட்டாயேடா /
இல்லமதை என்னை அழைத்தும்/
வந்து விட்டாயேடா என் மகனே /

உன் ஆசைகள்  அனைத்தையும்
நிறைவேற்றிய நான் /
இன்று இவ்வாசையையும்
நிறைவேற்றி/
உன் ஆசைக்கு வைத்து
விட்டேன் முற்றுப்  புள்ளியடா மகனே /

மருமளேஒரு சிறு வேண்டு கோள்/
நீ என்னைப் பார்க்க வரும் போது /
உனது மகனை அழைத்து வராதே /
உன் பிள்ளை பின்னர் உனக்காக/
இடம் தேட இன்று முடிவு எடுப்பான் /

என்னைப்  போல் நீயும் /
அனாதையாக இங்கே அமர வேண்டாம்/ உனக்கும் இன்நிலை வர வேண்டாம் /
எப்போதும் நீங்கள்  சந்தோசமாக/
இருக்க இறைவனை வேண்டுகின்றேன் /

நீங்கள் இருவரும் இறுதி வரை
பிள்ளையுடன் இருக்க வேண்டும்
என்று இறைவனைப்  பிராத்தனை செய்கின்றேனம்மா மருமகளே /

விடு முறை எடுத்து வரவேண்டாம்/
என்னைப் பார்க நேரம் கிடைக்கும்/
போது  நீ மட்டும்  வந்து விடு மகனே/
சென்று வா மகனே  கவனமாக
பாதையைப் பார்த்துப் பயணித்து
விடு மகனே /

No comments:

Post a Comment