Sunday 14 October 2018

என் அருகே நீ வேண்டும்

குட்டைக் குளத்தில்
தூக்கிப் போட்ட கல்லும்/
நெட்டை மரத்தில்
செதுக்கிய நம் பேரும்/
பட்டம் விட்ட வெட்டைவெளியும்/
நீ தடுக்கி விழுந்த மரத்தின் வேரும்/
உன் நினைவை.த்
தூண்டி விடுகிறதடி என் சின்னவளே./

நீ கட்டம் போட்டு நொண்டி ஆடிய பாதையும்/
உன்னுடன் கபடியாடி  அடி பட்ட என் காயத்தின் தழும்பும்/
நித்தம் நீ  ஊஞ்சல் ஆடிய
புளியமரத்து கொம்பும் /
ஓய்ந்து போய் உள்ளதடி என் சின்னவளே./

உன் கரம் பட்டு நட்ட செடியில் /
கொத்தோடு மலர் நிற்குதடி /
தொட்டுப் பறிக்க உன் கரம் /
தேவையடி என் சின்னவளே./

குட்டைப் பாவாடை கட்டி  குட்டி விளையாடினாய்/
தாவணி  போட்ட பின் கண் சிமிட்டி உறவாடினாய்/
திட்டம் போட்டு உன் அப்பன் மறைத்து வைத்து /
விளையாடுகிறான் அயல் நாட்டில் உன்னையடி /

பசிக்கு நான் பகையானேன் /
பட்டிணிக்கு உறவானேன்/
மச்சினிச்சி உன்னாலே தினமும் கவலையானேன்/
வேளாண்மை யில் வேலைக்காக இறங்கினேன்/
அங்கும் உன் நினைவு வந்ததடி என் சின்னவளே...!/

அன்று நீ நத்தை பார்த்து /
அத்தை என்று அலறினாய்/
என்ன என்று கேட்டேன் /
நத்தைக்குப் பதிலாக பத்தை என்றாய் /
பயத்தினால் வார்த்தை தடுமாறினாய் /
நான் சிரிக்கவே வெட்கம் கொண்டு
தலை குணிந்தாய்/
இன்று நத்தை உள்ளதடி இங்கே/
நீ  எங்கே என் சின்னவளே../

நீ வர வேண்டும் என் கரம் சேர வேண்டும்/
மட்டற்ற மகிழ்ச்சியில் நாம் திகைக்க வேண்டும்/
நிலையான இன்பம் கிடைக்க வேண்டும்/
இவை நடக்கவே அயல் நாடு சென்றவளே/
எப்போது வருவாய் என் சின்னவளே /
என் மூச்சு நீடித்து  விடவே என்னருகே நீ வேண்டும் ../

        

No comments:

Post a Comment