Monday 15 October 2018

முந்திரிக் கொத்து

பேருல மட்டுமே உள்ள முந்திரி..

பாசிப்பயறு ....1கப்
வெல்லம் .......1 கப்புக்கும் குறைவாக
தேங்காய் துருவல்... அரைக்கப்
ஏலக்காய். பொடி...சிறிது

பச்சரிசி..1 கப்...
சமையல் எண்ணெய்.... அரைலிட்டர்..

#பாசிப்பயறை சிவக்க வறுத்து
கொர கொரப்பாக  பொடித்துக் கொள்ளவும்...

#வெல்லத்தை..கரையவிட்டு வடித்து விட்டு,பாகு பதம்
ஒரு கம்பி பதம் வந்ததும்
பொடித்த பாசிப்பயறு,ஏலக்காய் பொடி,தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து கிளறி வைக்கவும்...(அடுப்பை அணைத்துவிட்டு)

பச்சரிசி ஊறவைத்து நைசாக அரைத்து...சிறிது மஞ்சள் தூள் சிட்டிகை உப்பு சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக்கொண்டு...
வெல்லத்தில் சேர்த்த பாசிப்பயறை சிறு சிறு உருண்டை ஆக்கி,
பச்சரிசி மாவில் முக்கி
நன்றாக காய்ந்த எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்..

மூன்று மூன்றாக போட்டு எடுக்கும் போது முந்திரிக் கொத்து போல இருக்கும்...
ஆகையால் இந்த பெயர்..

கன்னியாகுமரி நாகர்கோவில்
தெற்கு கேரளத்தில் இது மிகவும் முக்கிய பலகாரம்...
சிலர் வெல்லத்திற்கு பதில் கருப்பெட்டி சேர்ப்பர்....

செல்வலஷ்மி/லஷ்மிரமா

No comments:

Post a Comment