Monday 8 October 2018

மருத நிலத்து மரிக்கொழுந்தே


மனம் நொந்து போச்சு மாமா.
மனசு எல்லாம் வலி நிறைஞ்சு போச்சு மாமா.
மருத நிலத்தில் கருகிய வேளாண்மை போல்.
மனசு எல்லாம் வெறுமையாச்சு மாமா .../

இந்த மரிக் கொழுந்து உள்ளத்திலே
இன்று தீப்பிளம்பாய் எரிகிறது மாமா
இறந்து விட நினைக்கையிலே
இறவாத  உன் நினைவு இறுக்கப்பிடிக்கிறது மாமா ..../

நெல் எடுக்க வந்து நெஞ்சை எடுத்துப் போனாயே மாமா.
கல் எறிந்த குளமாய் கலங்கி நிக்கிறேன் மாமா.
நில் என்று தடுக்க. முடியாத வாறு உள்ளேன் மாமா.
நல்லவன் என்று நினைத்தேன்
சொல் அறுத்துப் போனாயே மாமா...../

மரிக் கொழுந்து இதயம் நொறுங்கிப் போச்சு மாமா.
மறந்து விட்ட காரணத்தை நீ கூறி விடு மாமா.
வேர் ஓடும் மரவள்ளி போல் மோகம் உனைத் தேடுது மாமா.
மத்தவங்க பெத்தவங்க அறிந்து என்னைத் திட்டும் முன்னே வந்து மாலை மாற்று மாமா...../

No comments:

Post a Comment