Monday 1 October 2018

மணத்தக்காளி ரசம்


மனம் மயக்கும்
மணமணக்கும்
மணத்தக்காளி ரசம்.

தேவையான பொருட்கள்
++++++++++++++++++++++++
மணத்தக்காளிக் கீரை : தேவையான அளவு
புளி : 50 கிராம்
தக்காளி : 100 கி
கொத்தமல்லி : 1 கொத்து
ப.மிளகாய் : 3
மிளகு : 25 கி
பூண்டு : 50 கி
சீரகம் : 25
மஞ்சள் தூள் : 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் : 1 தே.க
கருவேப்பிலை : 1 கொத்து
கடுகு : தே.ஏற்ப
நல்லெண்ணெய் : 50 மி
உப்பு : தே.ஏற்ப

செய்முறை :
1. மிளகு, பூண்டு, சீரகம்,
     மிளகாயை அரைத்து
     முக்கால் பதத்தில்
      அரைக்க வேண்டும்.
2. புளியை ஊற வைத்த நீரில்
     தக்காளியைப் பிசைந்து
     போட வேண்டும்.
3.பாத்திரத்தில் எண்ணெய்
   ஊற்றி,கொதித்த பின்   கடுகைப் போட்டு நன்றாக வெடிக்க விட வேண்டும்.
4.அரைத்த பொருளையும்
அதனோடு மணத்தக்காளி
இலைகளையும்,
கொத்தமல்லியயும்
   வதக்க வேண்டும்.
5. கரைத்த புளியையும்
தக்காளியையும் வதக்கியதில் ஊற்ற வேண்டும்.

6. பெருங்காயப்பொடி,மஞ்சள்பொடியைத் தூவ வேண்டும்.
7. நுரை பொங்கி வரும்போதே இறக்கிவிட வேண்டும். அதிகம் கொதிக்க விடக்கூடாது.

பயன்கள் :
* மார்புச்சளி நீங்கும்
* இருமலுக்கு நல்லது
* காய்ச்சலைக் 
   குணப்படுத்தும்.

ம.கண்ணன்.

No comments:

Post a Comment