Monday 1 October 2018

ஆத்து நண்டு மிளகு பூண்டு குழம்பு

தே.பொருட்கள்

ஆத்துநண்டு 1/2கிலோ
பெரிய வெங்காயம் 3
பூண்டு முழுதாக ஒன்று
மிளகு 1தே.கரண்டி
மிளகாய் வற்றல் 10
தேங்காய் நறுக்கியது 1கப் (சிறியது)
கொறுக்காய்ப்புளி 3
சி.சீரகப் பொடி 2சிட்டிகை
பெ.சீரகப்பொடி 2சிட்டிகை
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
ரம்பை இலை 1
முருங்கைக் கீரை ஒரு கைப்பிடி
உப்பு தே.அளவு

செய்முறை

நண்டை கோதை நீக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்  கறிவேப்பிலை என்பவற்றை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
கொறுக்காய்ப்புளியை நீரில் ஊறவிடவும்.
அரைப்பதற்கு

சுத்தம் செய்த பூண்டு, தேங்காய்த்துண்டு, மிளகு,  மிளகாய் வற்றல் என்பவற்றை தனித்தனியே பொன்வறுவல் வறுத்து நன்கு மைய அரைத்துக்கொள்ளவும். அரைக்கும்போது ஊறிய கொறுக்காயப்புளி சேர்த்து அரைத்தல் வேண்டும்.

நண்டை கடாயில் இட்டு உப்பு சேர்த்து சிறிது நீர் ஊற்றி ரம்பை இலை சேர்த்து அவிக்கவும்.நண்டு அவிந்து நன்கு சிவந்ததும் அரைத்துவைத்துள்ளவற்றை தேவையான அளவு நீர் ஊற்றிக் கரைத்து அவியும் நண்டினுள் ஊற்றவும்.
கொதித்து கமகமக்கும் வாசனை வரும்வேளை நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சி.சீரகப்பொடி பெ.சீரகப்பொடி என்பன சேர்த்து கிளறிப் பிரட்டிவிடவும்.
பின்னர் இறக்கும் முன் முருங்கைக்கீரை தூவிக் கிளறி மூடிவிட்டு அடுப்பிலிருந்து இறக்கிக்கொள்ளவும்.
சுவையான ஆத்துநண்டு மிளகுப்பூண்டுக் குழம்பு தயார்.....

குறிப்பு   ஆத்துநண்டு வேண்டும்போது உயிருடன் வேண்டவும். இறந்ததாயின் சதை கரைந்துவிடும்.

No comments:

Post a Comment