Friday 26 October 2018

எரியும் மனம்

நான் அமைதியானவள்  -அல்ல
அமைதியாக்கப் பட்டேன்/
நான் அடங்கிப் போகின்றவள்  இல்லை
அடைக்கி ஒடுக்கப்பட்டேன்/

நான் கூண்டுக் கிளி அல்ல
ஊராரின் சம்பிரதாயம் என்னும்
வேலிக்குள் அடைக்கப்பட்டேன் /

நான் நாகரிகம் தெரியாதவள் இல்லை
நடை உடை பாவனைக்கு சமுதாயம்
தடை போட்டு  விட்ட பாவியானேன்/

ஆயிரம்  எதிரி எதிரே  வந்தாலும்/ எதிர்த்து நின்று போரிடும் பிறவி நான்./
ஊர் வாயால் வெளியாகும் /சொற்களை எதிர்க்க முடியாத கோளையானேன்/

பொல்லாத  சமுதாயத்தைக்  கண்டு  குமுறுது நெஞ்சம் என்றென்றும்/
எரிமலையாக வெடித்துச் சிதறினால். தாங்குமா?   இன்றும்  /
இந்த உலகம் எனக் கேட்கின்றேன்/

அனல் தெறிக்கும் தீப்பொறி
சொல் எடுத்து /
சுட்டெரிக்கும் வார்த்தைகளைக்
கொண்டு விட்டெரிப்பேன்/
வீனாய்ப் போன சமுதாயத் தடைகளை/
விதவை என்ற ஏற்ற  தாழ்வான
மூட நம்பிக்கையை
விட்டொழிக்கும் வரை /
காட்டுத் தீயாக நின்று எரிப்பேன் /

No comments:

Post a Comment