Thursday 11 October 2018

தீண்டும் தென்றல்

மழை கண்டு வளர்ந்த மொட்டு/
இதழ் விரித்து சிரித்தது பனி கண்டு/
தீண்டும் தென்றல்  தொட்டு /
அணைத்தது ஆசையை அள்ளி விட்டு./

வென்றது தென்றல்/
கொன்றது இதழில் மஞ்சம்/
திறந்த இதழில் திருடியது /
வாசனை கொஞ்சம் /

தீண்டிய தென்றல்/
இதழை நொள்ளிச் சென்றது /
நொள்ளிய இதழோ தோட்டம் /
தாண்டும் முன்னே தவறி விழுந்தது/

மலரைத் தீண்டிய தென்றல்/
மங்கையின் மேனியிலே மோதியது /
மோதிய தென்றல்/
அவளின் சுவாசப்புணல் நாடியது /

உதிர்ந்த மலரும்  வருந்தவில்லை /
உறவு கொண்ட இன்பத்தில்./
சுவாசத்தில் கலந்த தென்றலை/
மங்கை வெறுக்கவில்லை /
சுகந்தம் கண்ட இன்பத்தில் ./

தீண்டும் தென்றலும் தினம் தீண்டியே செல்கிறது /
தோட்டக்காரன் முன் நிலையிலும்/ துணிந்து பிடிபடாத திருடனாக./
முடிவு இன்றி என்றும் எப்போதும்/ தீண்டும் தென்றல்  தீண்டிய
வண்ணமாய் இரவும் பகலும் /

       

No comments:

Post a Comment