Monday 1 October 2018

மணத்தக்காளி கீரை நீர்

அனைவருக்கும் வணக்கம்.
எனது இன்றைய போட்டிக் குறிப்பு "

தேவையான பொருட்கள்:
மணித்தக்காளி  கீரை - 1 கப்
சிறு வெங்காயம் - 10.
துருவிய தேங்காய் - 1/2 கப்
சீரகம் - 1/2 டீ ஸ்பூன்
அரிசி கழுவிய நீர் - 1 கப் (அல்லது ஏதேனும் காய்கறி வேக வைத்த நீர் இருந்தாலும் சரி)
சின்ன வெங்காயம் - 10
பச்சை மிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1/2 டீ ஸ்பூன்

செய்முறை:
கீரையை நன்கு ஆய்ந்து இலைகளை மட்டும் எடுத்துக் கழுவிக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீட்ட வாக்கில் இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
சிறு வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
குக்கரில் நீர் விட்டு, ஒரு சிறுபாத்திரத்தில், கீரை, பச்சை மிளகாய், சிறுவெங்காயம், உப்பு ஒரு சிட்டிகை, சர்க்கரை, (கீரை கறுத்துவிடாமல் இருக்க) அரிசி கழுவிய நீர் இவற்றை சேர்த்து, மிகவும் மிதமான தீயில், ஒரு விசில் வரை வேகவைக்கவும். இப்போது கீரை நன்கு வெந்து இருக்கும்.
இதற்கிடையில், துருவிய தேங்காயிலிருந்து பால் எடுத்துக் கொள்ளவும்.
பிறகு வெந்த கீரையுடன் தேங்காய்ப் பால், தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு நிமிடம் வரை கொதிக்க விடவும். தேங்காய்ப் பால் சேர்த்தவுடன் அதிகம் கொதிக்க விட வேண்டாம்.
ஆரோக்கியமான மணித்தக்காளி கீரை நீர் ரெடி. நீரை வடித்துக் குடித்து விட்டு, கீரையை சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
உடல் சூட்டைத் தணிக்கும், வயிற்றுப் புண்களைப் போக்கும்.

எஸ் வி ரமணி

No comments:

Post a Comment