Monday 8 October 2018

பரங்கிக்காய் கூட்டுக் குழம்பு

செய்முறை

தேவையானவை:-
சற்று பெரிதாக நறுக்கிய பரங்கிக்காய் துண்டுகள்

எலுமிச்சை  அளவு புளி

சாம்பார் பொடி 3 மேசைக்கரண்டி

கடுகு, வரமிளகாய் ஒன்று தாளிக்க

கறிவேப்பிலை

செய்முறை: -

நறுக்கிய பரங்கிக்காய் குக்கரில் ஒரு விசில் அளவில் வேக வைத்து எடுக்கவும்

புளியை நன்றாக கெட்டியாக கரைத்து ஒரு கப் அளவு கரைசல் தயார் செய்து கொள்ளவும்

அடுப்பில் அடி கனமான பாத்திரத்தில் 4 தேக்கரண்டி எண்ணெய் விட்டு அதில் கடுகு வெந்தயம் தாளித்து தயார்நிலையில் உள்ள பொடியை சேர்த்து  ஒரு கிளறு கிளறி புளிக்கரைசலை அதனுடன் சேர்த்து வேகவைத்த பரங்கிக்காய் தேவையான அளவு உப்பு சிறிது பெருங்காயம் சேர்ந்து நன்கு கொதிக்க விடவும். 

கொதிநிலை குழம்பை கிளறும்போது சற்று கெட்டியான நிலையில் இறக்கிவிடவும். கருவேப்பிலை சிறிது சேர்க்கவும்.

சூடான சாதம் போட்டு சிறிது நெய் சேர்த்து இந்த குழம்பை கொஞ்சம் விட்டு நன்றாக பிசைந்து சாப்பிட கிட்டும் பேரானந்தம்

இரண்டுநாள்வரை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து சாப்பிட சுவை கூடும்

....வாசன் சாவி

No comments:

Post a Comment