Tuesday, 16 October 2018

மழைச்சாரல்

நெற்றி வியர்வை  சிந்தி
நிலத்தில் விழும் முன்னே
வந்து விடு மழைச்சாரலே
என்று நிமிர்ந்து நின்று
மண்டாடிய நாளும் உண்டு
என் வாழ்வினிலே ..!

மழைச்சாரல் கண்டு
மனமகிழ்ச்சி கொண்டு
ஏர் பூட்டி நிலம் உழுது
வேளாண்மை வளம் பெற்ற
நாளும் உண்டு என் வாழ்வினிலே.!

மரத்தோடு மரமாக நின்று
மழைச்சாரலிலே குளித்து
பழம் பறித்து பணமாக்கி மனைவி
மக்களுடன்  வளமான
வாழ்க்கை   நடத்தி இன்புற்ற
நாளும் உண்டு என் வாழ்வினிலே.!

முதுமை கண்ட உடல்
சாரல் மழை கண்டு
நடுங்கியே  ஒதுங்கிறது
இன்றைய நாளில் என் வாழ்வினிலே ..!

       

No comments:

Post a Comment