Monday 15 October 2018

அவள்

அவள் கண்கள் பார்த்தேன்,
கவிஞனானேன் /
அவள் கன்னம் பார்த்தேன்,
விஞ்ஞானியானேன் /
அவளது இதழ்களில்
இலக்கியம் படித்தேன் /
அதனாலே காவியம் படைத்தேன் /

அவளின் இடை பற்றிக் கூறவா?
அவளது நடை பற்றிக் கூறவா?
இரண்டுக்கும் இடையில் சிக்கி விட்ட/ எனது மனம் பற்றிக் கூறவா?

அவள் கழுத்தை தடவும்
சங்கிலியாக மாற ஆசை /
காதோடு ஆடி வரும்
கம்மலாய் மாற ஆசை/

அவளின் சிவந்த  மேனியில்  /
ஒட்டியே உள்ள உடையாக மாற ஆசை /
குட்டிக்  குட்டியாய் எத்தனையோ ஆசை/ 
குட்டி போட்ட படி என்னைக் கெட்டியாய்ப்
பிடித்துக் கொண்டு  பண்ணுது பூசை /

No comments:

Post a Comment