Saturday 16 February 2019

அகதி

அகதி என்னும் சொல்
இன்றுவரை தொடர்கின்றது/
ஆறு கடல் எங்கும் படகு மூழ்கின்றது /
அங்கும் பிணங்கள் மிதக்கின்றது/
எங்கும் ஆபத்து எப்போதும் ஆபத்து
என்றுமே காக்க நிரந்தரக் கரம்  இல்லை/

அல்லோலம்
கல்லோலம் குறையவில்லை /
ஆங்காங்கே  உயிர் இழப்பு மாறவில்லை/
பொன்னாசையை பெண்ணாசை வென்றது  /
அவ்வாசையை மண்ணாசை கொன்றது /

இயற்கைக்கும் எல்லை எதிர்ப்பு /
இரக்கம் அற்றவர்கள் போட்ட மறைப்பு/
அதி நவின வாகனங்கள் /
அதிவேகமாய் உயிரைக்
கொல்லும் ஆயுதங்கள் /

அறிவு இல்லாதோரால்
அமைதி இழந்தது தேசம் /
அகங்காரக்காரர்களின் தலை எடுப்பால் தங்கிட மறுக்கிறது நேசம்/
பாசங்கள் பாயாசமாய்
பரந்த உலகில் விரிந்து கிடக்கிறது/

கொலையைச் செய்து விட்டு  சிரிக்கான் /
குருதியிலே  உடல் நனையக் குளிக்கான் /
மனிதனை மனிதனே மிதிக்கான் /
உயிரைக் குடித்து தனக்கு மட்டு அனைத்தும் என்னும் சுயநலத்திலே குதிக்கான் /

கொடூரக் கொலைகளை புரிந்து/
ஈரக்குலையை நடுங்க வைத்து/
உள்ளூரிலும் அயல் நாட்டிலும் /
அகதி முகாம்களை அதிகரிக்க வைத்து/

உரிய பெயர் மாற்றப் பட்டு/ ஒட்டுமொத்தமாக அகதி என்னும்/
பெயரிலே அழைக்கப் பட்டு/
கம்பிக் கூண்டில் அடைக்கப் பட்டு /
கைதி போல் வாழ்க்கை வழங்கப் பட்டதே/

என்று மாறுமோ ????  இந்த நிலை/
அகதி என்னும் அவல நிலை  /
மனதினிலே எழும் ஏக்கங்களோ மலை/
விழியிலே தொடர் கண்ணீர் மழை/
இதற்குத் தீர்வு இல்லையோ ??  இறைவா/

No comments:

Post a Comment