Wednesday 20 February 2019

நானாக நான் இல்லை

உன்னைத் தொட்டுச் செல்லும்
தென்றலைக் கேட்டுப்பார் என்
காதலைக் கூறும்..........\

நீ ரசித்துப் பார்க்கும்  மேகத்தைக்
கேட்டுப்பார் உன் மேல் உள்ள
மோகத்தைக் கூறும்........\

உன் தோட்டத்து மலர்களிடம்
பேச்சுக் கொடுத்துப்  பார்
என் பாசத்தை விளக்க மொழி இன்றி
மலரும் மௌனத்தால் தலை அசைக்கும் .\

இயற்கையைக் கேட்டுப்பார் 
அசைந்தே பதில் கூறும் என்
உள்ளே அலைமோதும் உன்
எண்ணத்தை...........\

உன்  அறைக் கண்ணாடியையும்
உன் ஆழ் மனதையும்
உன் விழியையும்  தனிமையில்
கேட்டுப்பார் என் அழகை அழகாவே கூறும் \

உன்  கன்னத்தைக் கேட்டுப் பார்
கனவில் நான் கொடுத்த முத்தத்தை
மெதுவாகச் சொல்லிச் சிரிக்கும்.......\

உன் மார்பைக் கேட்டுப் பார்
நான் சாய்ந்து கொள்ளத் துடிப்பதை
வெட்கப்பட்டு சொல்லி முடிக்கும்.....\

நிதானமாய் இக் கவிதையைப்
படித்துப் பார் உன் உருவத்தை
சிலை வடித்திருக்கும்..........\

உன்  தலையணையிடம் செவி
மடுத்துப்பார் அதன் இணை
என்னிடம் மாட்டி  படும் பாட்டை
சொல்லத் தவிக்கும்........\

உன் உள்ளத்தை நீயே கேட்டுப்பார்
கனவில்  நினைவில் உறக்கத்தில்
கற்பனையில்  நிழலாக என் உள்ளே
சிக்கி  தவிப்பது உன் பெயர்தான்
என்பதை உன் புத்திக்கு கொண்டு
உறைக்கும் படி உரைக்கும்........\

  

No comments:

Post a Comment