Thursday 7 July 2022

இடுக்கண் தலை தூக்கி
கிடுக்கிப் பிடி
பிடித்திருந்த காலத்தில் 
உன்னை ஈன்று எடுத்த எனக்கு 
என்ன ஒரு துன்பத்தைக்
கொடுத்து விட்டாயடா மகனே. 

போர்க்களத்தில் 
நீ மாண்டிருந்தால் 
நெஞ்சம் நிமிர்த்தி 
நான் வாழ்ந்திருப்பேன்.

வழிப்போக்கில் நீ 
மாண்டிருந்தால் 
தாறுமாறாக 
வண்டி செலுத்திருப்பாய் 
தவறு உன்னிடம் என்று 
என்னை நானே 
தேர்த்திக் கொண்டிருப்பேன் .

கூடி விளையாடி 
கூட்டமாய் நீர்த்தாக்கில்
இருக்கும் போது மாண்டிருந்தால். 
உன்னை அறியாமல் 
நடந்த விபத்து என 
மனக் காயத்தை ஆத்திருப்பேன் .

நோயின் தாக்கம் கண்டு
பேயின் பார்வை பட்டு 
பாயில் வீழ்ந்து மடிந்திருந்தால்
காலத்தின் தண்டனையென 
ஏற்றுக் கொண்டிருப்பேன்.

இத்தனையும் உன்னை 
நெருங்கிட தயங்கி 
தள்ளியே நிற்க 
உன் கழுத்தை நீயே 
நெரித்து விட்டாயே 
அதைத்தான் ஏற்றிட
முடியவில்லையடா மகனே.

அவளை வைத்து 
எத்தனை எத்தனை 
கற்பனை வளர்த்தாய் 
அதனை நிறைவேற்றியதாக
கனவு கண்டு 
சொல்லியும் நகைத்தாய்.

#சாலு மாக்குப் பிறகு தான்
யாராயினும் எனக்கு என்று 
சொன்ன படியே இருந்தாய். 
உன் வார்த்தை 
உண்மையென உயிரை 
மாய்த்து நிரூபித்தும் விட்டாயெடா.

உன் குடும்பம் மட்டும் இன்றி 
ஊரில் பலரின் வருத்தம் 
ஒன்றே ஒன்று தானடா மகனே 
உன் அன்புக்கும் நம்பிக்கைக்கும்
தகுதி  அற்ற  ஒருத்திக்காக 
உன் மூச்சை நிறுத்தி விட்டாயென. 

பிரிவை பொறுத்திருக்க முடியாமல் விழிகளை இறுக்க மூடி குழிக்குள் 
நீ இறங்கிப்  படுத்து விட்டாய்.
பளிங்கு கற்களைப் போல் 
அவள் மினிக்கிக் கொண்டு 
உலாவுவதை  காணாமல் 
நம்பி கெட்டு விட்டாயேடா .

உன் வியர்வை வாடை
அவளின் உடலில் மாறும் முன்னே
வேற்று கிரகவாசியாய் 
மாற்று மானிடர்களுடன் 
நீ பார்த்து வாங்கிக் கொடுத்த 
உடை அணிந்த படியே 
கை கோர்த்து பயணிக்கத் 
தொடங்கி விட்டாளடா .

உனது மெய்யான காதலை 
மையாகக் கரைத்து விட்டு 
தேவைகளைப்  பூர்த்தி செய்திட 
பொய்யான காதலை விரித்து
தொய்யாமல் நகர்ந்திட 
தொடங்கி விட்டாளடா.

நீ தான் முதல் காதல் 
முதல் கணவன் என்றால் 
அவள் முக வாட்டத்தோடு 
வாழ்ந்திருப்பாள் .
எண்ணிக்கையில் 
நீ இரண்டாமிடம்
இரண்டையும் கொன்று விட்டு 
அவள் போடுகின்றாள் 
கன்னி வேடமடா.😭

No comments:

Post a Comment