Monday 4 July 2022

அழகு ஆபத்து 
என்பார்கள் பலர் 
அதனை  ஏற்கவில்லை 
அப்போது என் மனம் 
அதனாலே பேதை 
இவளின்  முகம் கண்டு 
சந்தேகம் கொண்டு அலசி 
ஆராய வில்லை  எனது குணம்./

ஓடி வந்தவளை போடி 
என்று விரட்டாமல் 
பெற்ற மகளோடு 
ஒப்பிட்டு பார்த்தேன் 
உப்பிட்ட உணவை
பங்கிட்டு ஊட்டியும் விட்டேன். /

மூளிக்காதோடு  அனாதை 
போல் வந்தவளுக்கு  
திருமண பந்த 
உத்தரவாத பத்திரமிட்டு 
அங்கிகாரமும் கொடுத்தேன்./

பொருளோடு 
உடையும் கொடுத்து 
ஆடம்பர வாழ்க்கைக்கு
தடையும் போடாது 
விட்டும் கொடுத்தேன்./

பெண்ணுக்கு நிகராக
சொத்தோடு என் ஒற்றை 
மகனையும் கொடுத்தேன் .
மருமகள் என்னும் பந்தத்தோடு 
மனை கொடுத்து 
தனிக்குடித்தனமும் வைத்தேன்./

அப்பன் பெயர் 
தெரியாத பிள்ளை போல் 
அரசு அடையாள அட்டை 
இல்லா பொம்மையாக 
வந்தவளுக்கு மகனின் 
பெயரை முத்திரையிட்டு 
அடையாள அட்டையோடு 
நடமாடவும் விட்டோம்./

தாய் வீட்டுச் சீர் 
இன்றி வந்தவளுக்கு 
 (21)ஆவது பிறந்த நாளையும் 
தாய்க்குத் தாயாக இருந்து 
என் உறவுகளோடு 
செய்தும் முடித்தேன்/

இன்னும் எத்தனை எத்தனை 
சுதந்திரம் கொடுத்தேன் 
இவளின் தங்கையையும் 
இணைத்துக் கொண்டாள் 
ஆசைப் பட்ட 
இடமெல்லாம் சென்றாள் 
கண்ட கடையெல்லாம் 
அழைத்துச் சென்று உண்டாள் 
என் பிள்ளை உழைப்பை 
உப்புக் கல்லாய் கரைத்து முடித்தாள்.

 இத்தோடு இவள் நிறுத்தி இருந்தாள் பெத்தவள் நான் இப்போது 
கலங்கி இருக்க மாட்டேன். 
உடன் பிறந்தவள் உடன்பிறப்பை 
இழந்து தவிர்ப்புக்குள்ளாக மாட்டாள்  
தூக்கி வளர்த்த உறவெல்லாம்  
கதறிக் கலங்கிட  மாட்டார்கள். 

வேலி தாண்டிட தடையாக 
இருந்த தாலியை 
அறுத்திட  நினைத்தாள் 
அவளின் போலிக் காதலின் 
முகத்திரையைக் கிழித்தாள்  

நம்பிக்கையின் தோல்வி 
கண்ட என் பிள்ளை 
கயிற்றுக்கு 
கழுத்தைக் கொடுத்து 
அவமானத்தில் இருந்து 
விடுதலை எடுத்தான்/

மொத்தமாய் பெற்ற மகனை 
அழித்து விட்டாள் 
கொத்தோடு குடும்பத்தை 
சோகத்தில் வீழ்த்தி விட்டாள் 
அவளைத் தாங்கிப் 
பிடித்தமைக்கு தலைமேல் 
இடியை இறக்கி விட்டாள் ./

நன்றி கெட்டவளுக்கு  
மறு பிறவியிலும் சரி 
இப் பிறவியிலும் சரி  
நல்ல வாழ்வும் 
கிடைக்கப் போவதில்லை
நல்ல சாவும் 
கிடைக்கப் போவதில்லை
இறைவன் நீதி 
உள்ளவனாய் இருந்தால் 
இவள் நாசமாய் போவாள் .

(இவளின் முகம் 
பார்த்து இனியும் யாரும் 
ஏமந்து விடாதீர்கள்  
கடைசியாக ஏமந்தது 
என் பிள்ளையாக இருக்கட்டும்😭😡)

No comments:

Post a Comment