Wednesday 7 August 2019

ஆலமரத் தொட்டிலிலே

உதிரத்தில் உருவெடுத்த
சின்ன மணித் தேரே -ஆரிராரோ/
என் மடி ஏந்த வானத்து நட்சத்திரம்/
வந்திறங்கியதோ ?மானே-ஆராரோ/

இழுப்பைப் பூ எண்ணெய் எடுத்து/
இடுப்பு வலிக்குப் போட்டுத் தேய்த்து/
ஈன்று நான் எடுத்த செல்லமே/

ஏழை என் குடிசைக்கு /
நிழலென முன் வாசலில்
நிற்கும் ஆழங்கிளையிலே/
ஆத்தா என் சேலை தனைத் தொட்டிலிட்டு /
ஆராரிரோ நான் பாட/

கருவிழியிரண்டும் நீ மூடி /
ஆழ்ந்த உறக்கத்தை
சூழ்ந்திருக்க வேண்டுமம்மா
ஆரிரரிராராரோ -ஆரிவரோ/

பொன் மயிலே அள்ளி அணைப்பேன்/ மெல்ல முத்தம் பதிப்பேன் /
செல்ல மொழி பேசி /
சின்னதாய் கன்னம் கிள்ளி/
உன்  பசி தீரப்  பால் கொடுப்பேன்/

ஆலமரத் தொட்டிலிலே/
அனுதினமும் உறங்க வைப்பேன் /
இந்த ஏழ்மை வாழ்வை
ஆள வந்த என் ஏழை விட்டு இளவரசியே- கண்ணுறங்கம்மா  பொன்னு ரதமே -ஆரீரிரராரீரோ /

No comments:

Post a Comment