Wednesday 7 August 2019

சொன்னாலும் புரியாத துயரம்

பயணச்சீட்டு கரங்களில்
கிடைத்ததுமே/
பிறக்கிறது மகிழ்ச்சி /
பறக்கிறது அந்த நொடியே
இன்பப் பெருமூச்சு/

புறப்படத் தயாராகும்/
அந்தச் சில. நாட்களிலே/
பாதம் மண்ணை மறந்து /
விண்ணில் பறப்பதாக /
நினைத்து சிறகு விரிக்கிறது/

இரண்டு மூன்று நாட்கள்/
தடபுடலான விருந்து நடக்கிறது /
வழியனுப்புவதற்காக வருகை தரும் /
தூரத்தின் உறவுகளின் வரவும் அதிகரிக்கிறது/

விருந்தோடு மருந்து கேட்டு /
முன்னும் பின்னும் நண்பர்களின் /
சுரண்டல் நாடகம் அரங்கேறுகிறது /
மது அடித்த மயக்கத்தில் /
அந்த இடத்திலே பல வாக்குறுதி காற்றிலே கலக்கின்றது/

ஆட்டோட்டம் எல்லாம் முடிகிறது /
பயணம் தொடர்கின்றது /
பாதமோ அயல் நாட்டு
மண்ணை மிதிக்கிறது/

வட்டிக்கு வாங்கிய பணத்திலே /
பெட்டியை நிறைத்து கொண்டு /
நாடு கடந்தாச்சு /
நாள் செல்லச் செல்ல /
பணியிடத்தில் தொல்லைகள்
தலை தூக்குகிறது/

பணவரவு தாமதம் /
வாங்கிய பணத்தின் வட்டியின்
பெயரால் /
குடும்பத்திலே  குட்டிக் 
குட்டி சச்சரவு பெருகிறது /

பட்ட கடன் கட்ட வக்கில்லை/
வட்டிக்காரன் நாக்கு வசப்பாடுகிறது/. ஊரைப்பிரிந்து உறவைப் பிரிந்து /
வந்தும் ஊதியம்  பற்றாக்குறை/ அழுத்தத்திலே மூழ்கிறது மனம் /
இரவு பகல் பாராது/

வட்டிக்கு குட்டி கட்ட ஒரு வருடம். ;
வட்டி கட்ட ஒரு வருடம் /
கை நீட்டிப் பெற்ற பணம்
கட்ட ஒரு வருடம் /
தொடர்கிறது அயல் நாட்டு வாழ்வு/ பட்டத்து  வால் போல் நீள்கிறது/

இளமை கரைகிறது /
முதுமை அணைக்கிறது /
வறுமை குறையவில்லை /
வளர்ச்சி காணவில்லை /

சுட்ட பழம் போல் போச்சு வாழ்வு /
ஊதி ஊதி தட்டித் தட்டி எடுத்தாலும் /
சுவைக்கவில்லை /
அயல் நாட்டு உழைப்பாளியாகப் போனோருக்கு  வாழ்வு /

No comments:

Post a Comment