Friday 26 July 2019

கடந்து போன காதல்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி, ஆடி 2017
போட்டி - 02வது மாதம்
போட்டிக்கவிதை எண்- 26...

#உலகப்பாவலர்மன்றம்.

தலைப்பு-கடந்து போன காதல்

............................................

பாதை வழி வந்த காதல்./
பாதியிலே போனதனாலே./
விழியும்
குளிக்குதையா கானல்நீரில் /

பத்திரமாய் வைத்திருந்த மனம். /
உனக்கு  மட்டும்  சத்திரமாக மாற்றியதனாலே. /
செத்து செத்து பிழைக்குதையா
என் ஜீவன் தன்னாலே/

இடம் பார்த்து தடம் பதித்து. /
இடது வலது என்று நம் பெயர் பதித்து. /
சின்ன வீடு நான் கட்ட /
செல்லமாக. நீ உடைக்க /
துரத்தி அடித்து /
பின்னர் பிடித்தணைத்து. /
முத்தமிட்ட அந்த நாளை /
கடல் அலையும்
சொல்லி விட்டு போகுதையா./

கரம் பிடித்த படி நின்றோம் /
கருமாரியம்மன் ஆலயத்தில். /
பல கற்பனைகளை வளர்த்த படியே./ கனவிலும் நினையாத காலம் வந்து/ கொடுத்ததையா பிரிவு
என்னும்  வாசல்ப்  படியை./

பூங்கா வனத்திலே /
சோடி போட்டு சுத்தும் /
காதலர்களைப் பார்க்கையிலே /
எரிச்சல் மூட்டுதையா/

கண்ணுக்குள்ளே. /
கொதித்த படியே உப்பு நீரும் /
சூடாகவே வடிந்து நீ முத்தமிட்ட /
கன்னத்தை தொட்ட படியே /
விழுந்து  மடியுதையா /

மாற்றான்  வீட்டுக்கு /
உறவாகப் போவாய் /
என்று நினையாத என் நெஞ்சம்/ தவிக்குதையா /
தீ பட்டு எரியும் பஞ்சாய் /

அன்றொருநாள்
நீ மொட்டை மாடியிலே
நின்ற படி வட்ட நிலவு பார்த்து /
எனக்காக என்று கூறியவாறு /
அள்ளி விட்ட பொய்க்
கவிதையெல்லாம்/
எண்ணிப் பார்க்கின்றேனையா. /

கடந்து போன காதல் /
உள்ளக் கிடங்கில் /
இருந்து உருகுதையா. /
சொல்லி அழ துணையும் இல்லை./ தனிமையிலே நின்ற படியே /
உனை நினைத்து அழுகின்றேனையா/

No comments:

Post a Comment