Friday, 29 November 2019

தடம் மாறும் தளிர்கள்



பிறப்பிலும் வளர்ப்பிலும் பெற்றவர்களிடம் குறையில்லை.
அறிவிலும் ஊக்கத்திலும்  
பிள்ளையிடம் குறையில்லை.
படிப்பிலும் திறமையிலும் 
நிறைகுடமான  பிள்ளை.
அன்பிலும் பண்பிலும் 
கோபுரமான கிள்ளை.
தனக்கான சுதந்திரம் தேடிடும் வேளை.


பாதையை மாற்றும் நண்பர்கள் 
பழக்கம் .
போதை  ஏற்றும் தோழியர் 
நெருக்கம்.
ஆசையைக் கூட்டிடும் பருவ 
மாற்றமும்.
அகந்தையை வளர்க்கும் வயதின் ஏற்றமும்.
தாயின் பாசத்தை நெஞ்சில் 
கரைக்கும் .
தந்தையின்  அறிவுரையை ஏற்றுக்க மறுக்கும்.


கிளை பற்றாக்  கொடியும் 
சொல் கேளாப் பிள்ளையும் 
பலன் அளிப்பதில்லை.
இணைய தளமும் சினிமாவும்  கொள்ளியிடும்
வாழ்க்கை  இளமையிலே கருகிய பின்னே .
நினைத்துக் கதறுவதால்  பயனில்லை கண்ணே.


No comments:

Post a Comment