Monday 4 November 2019

வயலும் வசந்தமும்



காற்றோடு நாத்தாட மனமும் 
கூத்தாட/
சேத்து மேலே பாதங்களையும் 
விட/
வசந்த உணர்வு நெஞ்சத்தில் 
பட/
காப்பு அணிந்த கரங்களும் களையைத் தொட/

கிளுகிளுப்போடு  ஏர் ஓட்டி பொன்னையா பாட/
பாட்டின் பொருளை நாட்டாமை 
தேட/
பாட்டுக்குள்ளே ஏழையின் கதையும் 
கூட/
சிந்தனையோடு பெண்களும் நாத்து 
நட/

நகரும் கருமேகமும் நாத்தின் முகம் பார்த்திட/
அள்ளிய நீரை வெள்ளமாய்த் 
தெளித்திட/
நெல்லு மணிகளை வேளாண்மை 
பூத்திட/
பார்க்கும் கண் மணியெல்லாம்  
வியர்ந்திட/

தொட்டு அறுக்கக் காலமும் நேரமும் பிறந்திட/
விளைச்சலைப் பார்த்து வியாபாரி 
குவிந்திட/
விதைத்தவன் மனமோ மகிழ்ச்சியில் மிதந்திட/
ஆனந்தக் கண்ணீர் விழியோரம் 
வந்திட/

பிறக்கும் பொங்கலோ இன்பம் 
பொங்கிட/
துன்பம் மறந்து இல்லத்தார் 
சிரித்திட/
வயலும் வசந்தமும் சுகந்தமாய் 
மாறிட/
விவசாகியின்  கரங்கள் கதிரவனை வணங்கிடும்/

No comments:

Post a Comment