Saturday 9 November 2019

ஆச மச்சானே நேசம் வைச்சேனே



கட்டையான மீசக் கார 
மச்சானே/
நெட்டையான உடம்புக் கார 
அத்தானே/
தட்டப்பயறு தோட்டக் கார 
மவனே/
பட்டம் போல ஆடுதய்யா யென் 
மனமே/

குறும்பு பேச்சினாலே நெருங்கிடும் ஆளாக்கிபுட்டாய்/
குறு குறுப்  பார்வயாலே என்னைய வளச்சிக்கிட்டாய்/
விறு விறுப்பான  நடையினாலே தூண்டிலப் போட்டுக்கிட்டாய்/
கறவமாடு போல என்னையே 
கிரங்க வச்சிக்கிட்டாய்/

எட்டுமுழ வேட்டியினாலே இறுக்கிப் புடிச்சிக்கிட்டாய்/
கட்டம் போட்டுக்கிட்ட சட்டையினாலே கட்டிப் போட்டுக்கிட்டாய்/
பஞ்சாயத்து மாப்பிள்ளையே மனசளவிலே
பொண்சாதியாய் ஆக்கிப்புட்டாய்/
சம்பா அரிசி சோறாக்கிப் போட்டுக்க ஆசய வளர்த்துப்புட்டாய்/

நானோ கறிவேப்பில பாசக்காரி/
ரோசாப் பூ  ரோசக்காரி/
தாழம் பூக் கோபக்காரி/
தவுடு பொடியாக்கும் சொல்லுக் காரி/

என்னையையே உனக்காக ஏங்கிக்க வச்சிப்புட்டாய்/
ஆசையோ அல மாதிரியே அடிக்கிறது மச்சான் /
அத விட நேசமும் ஒரு படி ஏறிக்கிறது மச்சான்/
என்னோட ஆச மச்சானே ஓ மேல தான் நானும் நேசம் வச்சேனே/

ஆர் எஸ் கலா  தேர்வுக்கு நன்றிகள் ❤🙏🙏

No comments:

Post a Comment