மனிதன் மனதிலே
மறைத்து வைத்து 
வளர்க்கும்  மரம்
பொறாமை ......./
இரத்தத்தை நீராக
ஊற்றி எலும்பை 
வேலியாகக் கட்டி
பாதுகாத்து வைக்கும் மரம்
பொறாமை ....../
பிறர் வாழ்க்கை 
மேல் கல் எறிந்து
அவர்கள் சந்தோசத்தை 
உரமாகப் போட்டு
வளர்க்கும் மரம்
பொறாமை ...../
மனம் என்னும் 
மண்ணிலே வளர்ந்து முகத்
திரையைக் கிழித்து
ஒரு நாள் வெளியாகும் மரம்
பொறாமை ....../
சிறுகச் சிறுகச் 
சேர்ப்பவனையும்
சிதைத்து துவைக்க வரும் மரம்  
பொறாமை ...../
உறவாடி கெடுக்க 
பாலம் போட முன்
வரும் மரம் பொறாமை ...../
உள்ளே ஒன்று வெளியே  ஒன்று
வைத்து மறைக்க
 காரணமாகும் மரம்
பொறாமை ..../
ஒருவன் வளர்ச்சியை 
பார்த்ததும் கெட்டவன் 
உள்ளத்தில் உடனே
 முளையிடும் மரம் பொறாமை ...../
மனிதனை மனிதனாக 
வாழ விடாமல் தடுக்கும் 
மரம் பொறாமை ..../
எத்தனை போட்டியிலும்
திட்டம் போட்டு நுழைகின்ற மரம்
பொறாமை ..../
பொதுவாக பொறாமை
 முளையிடுவது
உண்மை முளையிலே 
கிள்ளி விடுவதானால் 
விளைவதோ நன்மை ...../
 
No comments:
Post a Comment