Thursday 18 February 2016

ஆசையை சொல்ல வந்தேன்

அவன் அழகைச் சொல்ல வார்த்தை இல்லை
இருந்தும் சொல்ல வந்தேன் நான்
உன்னிடமே ......///

அவன் மேல் உள்ள காதலைச் சொல்ல
தைரியம்  இல்லை ஆனாலும் ஆசை
விட வில்லை ஓடி வந்தேன்  மெதுவாக
உன்னிடம் சொல்லவே .....///

ஓயாமல் அவன் பெயரை உச்சரிப்பேன்
ஓசை எழாதவாறு சொல்லி ரசிப்பேன்
உரக்கக் கூற வந்தேன் உன்னிடம்
மட்டுமே .....///

சுத்தி சுத்தி தினமும் போவேன்
சுத்தமாக அவன் கண்ணில் தென்
படமாட்டேன்  .....////

அவனை நேரில் பார்த்து சத்தியமாக
பேசியதில்லை தின சரி மறவாது
ஒத்திகை  பார்ப்பேன் கண்ணாடி
முன் நின்று உன்னிடம்  கூறி விட்டேன்
இன்று ....//

No comments:

Post a Comment