Sunday 21 February 2016

குயில் பாட்டு


சின்னக் குயில் ==நான்
செல்லக் குயில் ==நான்
காக்கா கூட்டில் உறங்கி
எழும்பும் குயில்==நான்
காக்காவோடு வாழ்வதால்
கூவிப் பழகப் பயம்
கொள்ளும் குயில் ==நான்...!!

அம்மா==அப்பா சோம்பேறி
சொந்தக் கூடு கட்ட முடியா
ஏமாளி கட்டி அணைத்து
முட்டையிடத் தெரிந்த
சோமாளி==....!!

நான் காக்கா அக்கா
உணவு கொடுக்க
கமுக்கமாக வாங்கி
உண்ணும் அறிவாளி...!!!

தத்தி==தத்தி=நடந்து
பார்த்தேன்  மெல்ல
மெல்லப்==பறந்தும்
பார்த்தேன்..==.....!!!

பரவசத்தில் என்னை
மறந்து குரலை உயர்த்தி
கூ===கூ===என்று பாடியும்
விட்டேன்....!!!!

போட்டார் காக்கா அக்கா
உச்சந் தலையில் ஒரு
குட்டு...!!!!

மதி மயங்கி விழி கலங்கி
எத்திசை போவது என்று
தெரியாமலே  பறந்து
வந்தமர்ந்தேன் ஒரு மலரக்
கிளை மேல்.....!!

வண்ண மலரைக் கண்டதும்
என்னை மறந்தேன் அதன்
வாசணையை முகர்ந்து
சுகம் கண்டேன்....!!!

எனக்கு சொர்க்கம் பக்கம்
என்று என்னி இன்பம்
கொண்டேன்....!!

இனிமேல் நான் தனிக்
காட்டு ராஜா என்று
கர்வம் கொண்டேன்....!!!

நான் இனி தினமும் கூவி
அழைப்பேன் என் ஜோடி
பெண்னை ==கூ===கூ==
கூ ==என்று யார் கேட்பது
என்னை....!!!

நானே ராஜ==நானே மந்திரி
பூங்காவனத்திலும்  பாலை
வனத்திலும் சோலைக்
குயில் நான் தானே..==நந்த
வனம் இனிஎன் சொந்த
வனம்தான்==ஹாஹா...!!

என் பாட்டு இனிமை என்று
பலர் கூறுவதாலே ஏன்
நான் நிறுத்த வேண்டும்
காக்கா அக்கா வாரும்
போட்டிப் பாட்டுக்கு நீயும்
பாடிப் பாரும் என்னுடன்....!!

எதிர் பாட்டு==கூ==கூ ==குக்கு
கூ===குக்கு ==அடடா இனிமையடி
என் குரல் இதுவரை தெரியாமல்
போனதே இந்தக் காக்கா அக்கா
கூட்டில் வாழ்ந்ததாலே பெண்ணே. :-)

    

No comments:

Post a Comment