Thursday 18 February 2016

அம்மா


தந்தை வழி கிடைத்தஒரு பொக்கிஷம்
நம்மைச் சுமக்கும் அன்னை அவள்
கன்னியாக இருந்து அன்னையாய்
உருவெடுத்த தெய்வம் .....////

அன்னையின் கருவறையில்
இருக்கும் போதே  நாம் கொடுக்கும்
தொல்லைகளை அன்போடு ஏற்றுக்
கொண்ட. மங்கை  அவள் .....////

எறும்பு கடித்து அழுதாலும் பசியினால்
அழுவதாக நினைத்து வாரி அணைத்து
பால் ஊட்டும் பாசக் காரி அவள் ....////

நம்மோடு சேர்ந்து விளையாடும்
போது பொம்மையாகிவிடுகின்றாள்
அவள் எத்தனையோ தியாகங்கள்
நமக்காகச் செய்யும் பிறவியாகின்றாள் ..///

இத்தனையும் மறந்தான் சில
மானிடப்பிறவி கை நடுங்க அன்னை
வீட்டில் இருக்க ஒரு  கை கொடுத்து
தூக்கி உதவ இரங்கல்  வரவில்லை
கல்லான சிலையின் முன் நின்று இரு
கரம் கூப்பி கும்பிடு போடுகின்றான்
அந்தப் பிள்ளை ......////

உயிர்  கொடுத்து உரு சுமந்த அன்னை
உயிர் பிரியும் நிலையில் இருக்க
சிலைக்கு அள்ளி இறைக்கான் பால்
குடங்களை அன்னையவளை மறந்து
நடக்கான் அல்லும் பகலுமே ....///

வலி தாங்கி மடி ஏந்தி பசி பொறுத்து
தூக்கம்  விழித்து நம்மை வளர்த்த
அன்னை இறுதி வழி பயணிக்கும்
வரை சுமை தாங்கியாக இருக்கும்
பிள்ளைதான் இறைவன் பாதம் பணியாமலே
வரம் பெற்ற பிள்ளையாவான்...//

   

No comments:

Post a Comment