நீ மறந்து  விட்டாய் 
என்பதற்காக நான்
 அழித்து விட முடியுமா 
என்  பாசத்தை.....////
  சிலேடையில் எழுதியதா 
அழி இறப்பர் கொண்டு 
அழிக்க.  சுவரொட்டியா 
கிழித்து விட்டு நடக்க...../////
 உன்னைக் கண்ட
 நாள் முதல் நெஞ்சில் 
விதை போட்டு வேர் விட்டு 
விழுதாகி வளர்ந்து 
இருக்கும் பாசம். ....../////
பரீட்சை வைக்கின்றாயே 
நீஎனக்கு  இது வேசம் என
நினைத்தாயோ....?
உரசிப் பாக்காதே 
 தீயில் போட்டு சுட்டும் 
மங்காது வெளித்திருக்கும் 
சங்கு போலேதான் 
இருக்கு உன் மேல் பாசமும்
என் நெஞ்சுக்குள் .....////
 
  
No comments:
Post a Comment