Tuesday 2 February 2016

ஏமாற்றம்

மணமாலையோடு
வந்தேன் 
இன்று மண நாள்
என்று வந்தேன்
வரம்  தர மறுத்தாய்
மொழி மறந்து
நின்றேன்...................\

நகை சூடி வந்தேன்
நாணத்தோடு
வந்தேன்  கரம்
தொட மறுத்தாய்
ஏங்கி நின்றேன்........\

பட்டு உடுத்தி வந்தேன்
பொட்டு வைத்து வந்தேன்
கிட்ட வராமலே வெறுத்தாய்
சிலையாகி  நின்றேன்...........\

ஆசையோடு வந்தேன்
ஓசை இல்லாமலே
உதாசனப் படுத்தினாய்
பேச்சு இழந்து நின்றேன்......\

கோலமிட்ட வாசலிலே
கொலுசோடு வந்து நின்றேன்
கோபமாக நீ முறைத்ததுமே
என்னையே மறந்து நின்றேன்......\

பொன் முத்தம் பதிக்க
என் இதழில் வண்ணம்
பூசிவந்தேன்
பெண்ணவளை ஏசி
விட்டாய்  செய்வதறியாது
தயங்கி நின்றேன்............\

கருணை நிறைந்த
கருணாகர மன்னா
காரணம் இன்றி என்னைக்
கைவிட்டதும் ஏனோ மன்னா.......\

மங்கை இவள் உள்ளம்
கங்கை இல்லை நீ அள்ளி
இறைத்து விட்டுப் போக
நங்கை இவள் கைப்பொம்மை
இல்லை   நீயும் எறிந்து
விட்டுப்  போக...........\

என்  விழி மீனை நீந்த
விட்டுக்  கண்ணீரிலே
நீ  அமைதியாகப் போகப்
போறதென்ன தேரினிலே.......\

மண்றாடி விட்டேன்
வாதாடி விட்டேன்
உன்  மனம்  இரங்கவில்லை
மாண்று விடமாட்டேன்
நானும்  ஏமாளி அல்ல
புரட்சிப்  பெண் 
அல்லவா மறுபடியும்
சந்திப்போம் .........................\

  

No comments:

Post a Comment