மறக்கத்தான் 
நினைக்கின்றேன்
மறக்க முடியவில்லை
ரணமாக போனது மனவலி.....///
உன் நினைவை 
நினைக்காது இருக்க
நினைக்கின்றேன்
நினைவாக வந்து 
கொடுக்கின்றது 
பெரும் வலி...........///
கீறல்களாக இல்லாமல்
கிழித்துவிட்டுப்
போனாயே  என்
மரித்துப்போன 
இதயத்துக்கு வலியின்
வீரியத்தை புகட்டி
விட்டுப் போனாயே....../////
அன்போடு நீ உரைக்க
அழைத்த போதெல்லாம்
உன் செய்தியை நிராகரித்து
விட்டேன்  இப்போது 
அதை என் கண் நோக்கி
அழுவதை உரைக்க வழி
இல்லாமல் போய் விட்டதடி தோழி....///
பாவி நான் ஆனேனடி
உன் அன்பு வார்த்தை
எல்லாம் அன்று 
தொல்லையாய் போனதடி....////
இன்று நினைவாக
வந்து ஈட்டிபோல்
குத்தி என் பிடிவாதக்
குணத்தை 
தண்டிக்கின்றதடி.....////
சிறுக சிறுக நீ அனுப்பிய
செய்தி எல்லாம் தேடித்
தேடி படிக்கின்றேனடி 
உதிரம் கரைந்து கண்ணீராய்
வடிக்கின்றேனடி......////
பிடிப்பு இல்லாமல்
போன செய்தியெல்லாம்
படித்து துடித்த படியே
 முடிக்கின்றேனடி என்னைக்
கலங்க விட்டு காற்ரோடு
உன் மூச்சு கலந்ததும் ஏனோடி.....////
பரிசு ஒன்று கொடுத்தாயடி
அதை வாங்க மறுத்தேனடி
அந்த நிமிடம் உன் இதயம்
எதை எதையெல்லாம் 
எண்ணி தவித்ததோ என்று
நினைத்து நினைத்து  இன்று நான்
தவிக்கின்றேனடி ,....../////
ஊமையாக
உள்ளத்தில் வருந்தி கண்ணீர்
கண்ணீராக வடிக்கின்றேனடி
என்னுயிர் நீ என்று சொன்னவளே
நான் உன் உயிரானேனடி உன்
உடல் எங்கே என் ஜீவன் தேடுதடி......////
 
  
  
No comments:
Post a Comment