ஏகப்பட்ட ஏக்கங்கள் 
நெஞ்சுக்குள் 
உன்னிடம் சொல்லி 
அழவே ஏங்குது விழி மெல்ல. 
தூக்க முடியாத் துயரங்கள் 
தலைக்கு மேலே அதை 
உன்னிடம் மட்டுமே 
சொல்லி இறக்கத் 
துடிக்கிறது நாவும் கூட. 
நீ காக்க வைக்கும் காலங்கள் 
ஏறிவிட்டே போகிறது ஏணி போலே.
உன்னை நம்பி நான் 
காத்திருக்கும் நாட்களோ 
தேய்ந்து கொண்டே 
போகின்றது தேய்பிறை போலே. 
வாசமான மல்லிகையும் 
வாடி விட்டதும் போகும்
 இடமோ குப்பையிலே 
பாசமான நெஞ்சம் 
பிரிந்து விட்டால் 
சொர்க்கம் வருவதில்லை 
பக்கத்திலே.  
நீ தொட்டுப் பேசத் 
தேவையில்லை  
கட்டி அணைக்கவும் 
தேவையில்லை.  
நான் தொடுக்கும் 
சொற்தொடருடன் 
தொடுந்திரு அது போதும்
 
No comments:
Post a Comment