Saturday 20 February 2016

போட்டி நடனம்


ஆண்=

வெட்டுக்கிளி பார்வை பார்த்து
வெல்வெட்டுத் துணிஉடுத்தி
வெடுக்கு  வெடுக்கு என்று நடந்த
பெண்னே என்னுடன் போட்டி நடனம்
ஆட வந்த கன்னியே...!!!!

பெண்=

பச்சை மரத்தடியில் நின்று பட்ட
புல்லாங் குழல் கையில் வைத்துக்
கொண்டு வெட்கப்பட்டு என்னை
நோட்டமிட்ட மன்னவனே போட்டிக்கு
நான் தயார் கண்ணனே ..!!!

ஆண்=

புல்லாங் குழலைத்  தூக்கிப் போட்டு
போட்டி என்னும் பெயரில் உன்னை
நெருங்கி ஆட வந்த நானும் தயாரடி
பெண்னே...!!!

பெண்=

வாங்கடி வஞ்சிகளே இவர் நிறுத்துங்கள்
என்று கெஞ்சும் வரை கொட்டுங்கடி கும்மி..!!

ஆண்=

வாங்க  வாங்க மைந்தர்களே இந்த
வஞ்சிகளின் விழி கலங்கி கெஞ்சும்
வரை இசையோடு தட்டுங்கள் உங்கள்
கைகளை...!!!

பெண்=

நான் வளைந்தாடுவேன் நெலிந்தாடுவேன்
அன்ன நடை போட்டாடுவேன் மயிலாட்டம்
உடையை விரித்தாடுவேன் இதைப் பார்த்து
தலை சுற்றி கீழே விழுந்து விடாதே  மன்னாவா
ஓ===மன்னவா...!!

ஆண்=

நான் குரங்காட்டம் குதித்து வருவேன் உன்
அருகில் பாம்பாட்டம் ஊர்ந்து வருவேன்
உன் தோளில்  மலராட்டம் தடவி வருவேன்
உன் கூந்தலை காற்றுப் போல் அணைத்தும்
விடுவேனடி   நீ அழறாதே பெண்னே
ஓ....கண்னே...!!!

பெண்=

ஆஹ   ஆஹ  இது என்ன புதுமையான
போட்டி போடா மாப்பிள்ளை நீ தான்
என்று புரிந்ததடா எனக்கும் வெட்க வெட்கமாக
வருகின்றதடி  தோழி நிறுத்துடி கும்மியை,,,!!!

ஆண்=

ஏய்பெண்னே==ஓடாதே நில்லு போட்டியில்
நீ தோல்வியடி  என் கன்னத்தில் இனி உன்
செவ்விதழ் முத்தமடி=ஹாஹா நான் கொடுத்து
வைத்த மன்னனடி  வாழ்த்த வாங்க என்
மைந்தர்களே எங்கள் இல்லற நிகழ்வில்
இசையோடு...!!!

    

No comments:

Post a Comment