Saturday 6 February 2016

தொலைக்காட்சி


இளையோருக்குப்
பைத்தியத்துக்கு
வைத்தியமாகக்
கணினி முதியோருக்கு
தொலைக் காட்சி............\

இரண்டுக்கும்
இடையில் உள்ள
வேறுபாடு கணினி
காட்டும் பல வழி
தொலைக்காட்சி
காட்டும் ஒரு வழி.....\

பல வழியைப் பின்
பற்றுபவன் நாசமாகப்
போகின்றான்(ள்)
ஒரு வழியைப் பின்
பற்றுபவள்(ன்)
தொலைக் காட்சியின்
முன் அமர்ந்ததும்
உலகத்தையே மறந்து
வீனாகப் போகின்றனர்....\

பல அவலங்களைக்
கண் முன்னே கொண்டு
வரும் ஒரு சாதனத்தின்
உள்ளே  தினமும் உலாவிக்
கொண்டு இருப்பதோ
நெடுந்தொடரே............\

நாடக மோகத்தில்
தானும் ஒரு நாயகிபோல்
சித்தரித்து சீறீப்பாய்கின்றாள்
தன் மாமியார் மேலே..........\

சரிக்குச் சரியாக
வாக்குவாதம்
போட்டு  நெடும் தொடர்
போலே குடும்பப்  பகையும்
வளர்கின்றாள்........\

கடமை கண்ணியம்
மறக்காள் தன் கண்
முன் தோன்றுவது ஒரு
மாயைக் காட்சி என்பதையும்
மறக்காள்............\

நன்மை தீமையை
ஆராயும் புத்தியும் இழந்து
தன் வாழ்க்கையையும்
இழந்து  விடும்  நிலைக்குக்
கொண்டு செல்கின்றது
இந்த நெடுந்தொடர்
மோகம்..........\

  

No comments:

Post a Comment