Wednesday 3 February 2016

குழந்தைகளா? கூலிகளா?


தடவிக் கொடுத்து தட்டிக் கொடுத்து
பக்குவமாக புரிய வைத்து நன்மை
தீமையை அறியவைத்து அன்பு
வார்த்தைகளைக் கொண்டு நல்ல
முறையில் அருமையான மகனாக
மகளாக பெற்ரோரின் பிடியில் இருந்து
வளர வேண்டிய பிள்ளை .....////

வறுமையின் பிடியில் சிக்கி
பாவிங்களின் கரங்களில் மாட்டி
படாத பாடு பட்டு பரதேசியாக
வளரும் அவல நிலையைக் கண்டு
மனம் நோவுகின்றது இன்றும் .....///

பசி தீர்க நாடி ஓடி வரும் பிள்ளையை
குட்டிக் குட்டி வளர்க்கான் திட்டி திட்டி
வேலை செய்ய வைக்கான் சின்னச்
சின்ன கரங்களாலே செங்கல் சுமக்க
வைக்கான் அழுத கண்ணீர் துடைக்க
ஒரு கரம் இல்லை அனாதை என்னும்
பெயரில் ஆன பிள்ளை .....//////

மடிப்பு கலையாத சட்டையும் தோள்பையும்
மாட்டி அன்னை கரம் பிடித்து நடக்கும்
சக குழந்தைகளைக் கண்டதும் முதலில்
வெளியாவதோ பெருமூச்சு பின்னாடி
தொடர்வதோ ஏக்கப் பார்வை குப்பத்து
குழந்தைகளின் அன்றாட வாழ்வில் ...///

அரை வயிறு கஞ்சி கொடுத்தாலும்
அதட்டி வேலை வாங்கினாலும்
கட்டளைக்கு அடி பணிவதிலும்
கொடுக்கும் கூலியை மறுப்பு
கூறாமல் பெறுவதிலும் எதிர்த்து
சண்டையிடவும் தெரியாதவர்கள்
குழந்தைகள் ....../////

இவைகளை தனக்கு சாதகமாக்கி
கொள்கின்றான் பாதகமான பணக்கார
முதலாளி  இந்த பாவிகளுக்கு பாடம்
புகட்ட இன்னும் பாராளுமன்றம்
பக்கங்களைப் புரட்ட வில்லை
இவைதான் பெரும் கொடுமை
பட்டாம்பூச்சியாக பறக்க வேண்டிய
குழந்தைகள் விட்டில் பூச்சியாக
கருகுவது என்றுதான் முடிவுக்கு
வருமோ நான் அறியேன் .....////

 

No comments:

Post a Comment