உன்னைக்  காதலிக்க ஆசை
ஆனால் அதற்கான தகுதியும்
 திறமையும் என்னிடம் இல்லை.
உன்  உணர்வுகளையும்
உணர்ச்சிகளையும் தூண்டி
விட்டு ரசிக்க ஆசை ஆனால் 
தொட்டு விடும் தூரத்தில் நீ இல்லை. 
உன்  உடையை நான் துவைக்க
நீ உடுத்தி நடை போடுவதை பார்த்து
ரசிக்க ஆசை ஆனால் உறவென்று
நான் ஆகி விட வழி தெரியவில்லை. 
நான் சமைத்து அதை நீ சுவைத்து
அருமையோ அருமை என்று பாராட்ட
வேண்டும் அப்போது நான் உன்னை 
அணைத்து அன்பு முத்தம் பதிக்க 
வேண்றும் என்று ஆசை  ஆனால் உன்
துணைவியாக. எனக்கோ வழி தென் பட
வில்லை .
நீ  திட்டும் போது அழுது  விட்டு 
அணைக்கும் போது  விட்டுக் கொடுத்து
வட்டியாக முத்துப் பிள்ளை பெற்றுத் தரவே
ஆசை ஆனால் உன் நெஞ்சணையிலும்
பஞ்சணையிலும் இன்னும் இடம் கிடைக்க
வில்லை. 
உன்னை அடையும் பாதை தெரியாமல்
தெரியாமல் தினறுகின்றேன்
தினமும் உன் உறவைத் தேடுகின்றேன்
உரிமை நீ என்று உளறுகின்றேன் 
உறவாக வருவாய் என்று கனவில் 
கூறுகின்றேன் முடிவு கிடைக்கவில்லை.
 
  
No comments:
Post a Comment