என்னை தழுவும் பூங் காற்றே
ஏன் இன்று நழுவுகிறாய் 
என்னவனை நினைத்து நான்
ஏங்குவதால் நீ கோபம்
கொண்டாயோ.
என்னுள் குளிர்  மூட்டும் 
பனித்துளியே ஏன்
என்னை தொட மறுக்கிறாய்
ஓ. என் உயிர் என்னிடம்
இல்லை என்னவனிடம்
சென்று விட்டது  என்பதை
கண்டு பிடித்து விட்டாயா.
என்னை தூங்க விட்டு
தாங்கிப் பிடிக்கும் மெத்தையே
ஏன் தூக்கம்  கலைத்து தவிக்க
விடுகிறாய் 
அவனைப் பார்க்க கண்கள்
பரிதவிப்பதை புரிந்து விட்டாயா.
புரிய வேண்டியவனுக்கு 
புரியவில்லையே
அறிய வேண்டிய 
என் தவிப்பை அவன்
அறியவில்லையே
திறக்க வேண்டிய 
உள்ளக் கதவு
இன்னும்  அவனிடம் 
திறக்கவில்லையே.
என்ன சொல்லிப் புலம்புவேன்
என் மன நிலையை. 
 
  
No comments:
Post a Comment